Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1056

பொருட்பால்ஒழிபியல்106. இரவு

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பைஎல்லாம் ஒருங்கு கெடும்.

karappiTumpai yillAraik kANin nirappiTumpaiyellA morungku keTum

VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி

பொருள் / உரை

முருகா எளிய உரை

தம்மிடம் உள்ள பொருளை இல்லை என்று மறைத்து வைக்கும் இழிவான கஞ்சத்தனம் இல்லாத வள்ளல் தன்மை கொண்ட பெருமக்களைக் கண்ட மாத்திரத்திலேயே, வறுமையில் வாடும் எளிய மனிதரின் துயரங்கள் அனைத்தும் மொத்தமாக அடியோடு நீங்கிவிடும்.

• கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் = தம்மிடம் உள்ள பொருளைக் கொடுக்க மனமின்றி மறைத்து வைக்கும் கருமித்தனம் என்னும் நோயற்ற வள்ளல்களைக் கண்ட மாத்திரத்திலேயே,• நிரப்பு இடும்பை எல்லாம் = இரப்பவரின் வறுமையால் வந்த துன்பங்கள் அனைத்தும்,• ஒருங்கு கெடும் = ஒரே நேரத்தில் அடியோடு அழிந்துவிடும்.

மு.வரதராசன்

உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

பரிமேலழகர்

கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். ('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

Meaning in English

It those you find from evil of 'denial' free, At once all plague of poverty will flee

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout