கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்றுஇரப்பவர் மேற்கொள் வது.
karappilAr vaiyakat tuNmaiyAR kaNNinRirappavar mERkoL vatu
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• கரப்பிலார் = தம்மிடம் உள்ளதை மறைக்காமல் இன்முகத்தோடு வாரி வழங்கும் வள்ளல்கள்,• வையகத்து உண்மையால் = இந்த உலகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையினால்தான்,• கண் நின்று = எளிய மனிதர்கள் தயங்காமல் அவர்கள் கண் எதிரே சென்று நின்று,• இரப்பவர் மேற்கொள்வது = வாயால் கேட்கவும் கூசித் தன் கண்களால் உதவி வேண்டும் நிலையை மேற்கொள்கின்றனர்.எளிய விளக்கம்:தம்மிடம் உள்ளதை மறைக்காமல் தாராளமாகக் கொடுக்கும் தாராள மனமுடைய வள்ளல்கள் இந்த உலகத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையினால்தான், வறுமையில் வாடும் எளிய மனிதர்கள் தயங்காமல் அவர்களின் கண் எதிரே சென்று நின்று உதவி கேட்கத் துணிகின்றனர்.
மு.வரதராசன்
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
பரிமேலழகர்
கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிதொன்றான் அன்று. (அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.
Meaning in English
Because on earth the men exist, who never say them nay, Men bear to stand before their eyes for help to pray





