இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு.
irattalum ItalE pOlum karattalkanavilum tERRAtAr mATTu
Shanu Mithra
பொருள் / உரை
முருகா எளிய உரை
தம்மிடம் உள்ள பொருளை இல்லை என்று மறைத்துக் கூறுவதைக் கனவிலும் நினைத்துப் பார்க்காத உயர்ந்த கொடையாளரிடம் சென்று உதவி கேட்பது, வறியவருக்குப் பிறருக்குத் தானம் கொடுப்பதைப் போன்றே பெருமை தருவதாகும்.
• கரத்தல் = தம்மிடம் உள்ள பொருளைப் பிறர்க்குத் தராமல் மறைப்பதை,• கனவிலும் தேற்றாதார் மாட்டு = கனவிலும் கூட நினைக்காத வள்ளல் குணம் கொண்டவரிடம் சென்று,• இரத்தலும் = உதவி கேட்டுப் பெறுவதும் கூட,• ஈதலே போலும் = பிறருக்குத் தானம் கொடுப்பதைப் போன்றே பெருமை தருவதாகும்.
மு.வரதராசன்
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
பரிமேலழகர்
கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். (உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.)
சாலமன் பாப்பையா
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.
Meaning in English
Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dream





