கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்றுஇரப்புமோ ரேஎர் உடைத்து.
karappilA nenjsiR kaTanaRivAr munninRirappumOr Eer uTaittu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• கரப்பு இலா நெஞ்சின் = தம்மிடம் உள்ளதை ஒளித்து வைக்காத பரந்த மனமும்,• கடன் அறிவார் முன் நின்று = 'இல்லாதவருக்குக் கொடுப்பது என் கடமை' என்று உணர்ந்த கொடையாளர் முன் சென்று நின்று,• இரப்பும் = தன் வறுமையைப் போக்க உதவி கேட்பதும் கூட,• ஓர் ஏஎர் உடைத்து = வறியவர்க்கு ஒரு தனி அழகும் கண்ணியமும் தருவதாகும்.எளிய விளக்கம்:தம்மிடம் உள்ளதை மறைக்காத தூய உள்ளமும், 'இல்லாத எளியவருக்கு உதவுவதே நம் கடமை' என்ற உயர்ந்த எண்ணமும் கொண்ட வள்ளலின் முன்னே சென்று நின்று உதவி கேட்பதும் கூட, வறுமையில் வாடும் மனிதருக்கு ஒரு தனி அழகையும் பெருமையையும் தரும்.
மு.வரதராசன்
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
பரிமேலழகர்
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து. ('சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.)
சாலமன் பாப்பையா
ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.
Meaning in English
The men who nought deny, but know what's due, before their face To stand as suppliants affords especial grace





