இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்அவர்பழி தம்பழி அன்று.
irakka irattakkArk kANin karappinavarpazhi tampazhi anRu
Akshara Lakshmi
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• இரக்க = வறுமை நிலையின் உச்சத்தில் உதவி கேட்டு இரக்கலாம்;• இரத்தக்கார்க் காணின் = உள்ளதை மறைக்காமல் கொடுத்து உதவும் தகுதி படைத்த சான்றோரைக் கண்டால் அவரிடம் மட்டுமே கேட்க வேண்டும்;• கரப்பின் = அப்படிப்பட்டவர் தம்மிடம் இருந்தும் இல்லை என்று மறைத்து மறுத்தால்,• அவர்பழி = அது கொடுக்க மறுத்த அவருக்கே மாபெரும் பழியாகும்;• தம்பழி அன்று = வறுமையால் கேட்டவர்க்குப் பழியாகாது.எளிய விளக்கம்:வறுமையால் வாடும் ஒருவர், உள்ளதை மறைக்காமல் தாராளமாகக் கொடுத்து உதவும் தகுதி படைத்த வள்ளல் தன்மையுடைய நல்லவர்களைக் கண்டால் அவரிடம் உதவி கேட்கலாம்; ஒருவேளை அவர் தம்மிடம் இருந்தும் இல்லை என்று மறைத்துக் கொடுக்க மறுத்துவிட்டால், அந்தப் பழி மறைத்த அவருக்கே போய்ச் சேரும், கேட்டவருக்குப் பழியாகாது.
மு.வரதராசன்
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.
பரிமேலழகர்
இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான். ('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர்கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும்,ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
ஏதும் இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.
Meaning in English
When those you find from whom 'tis meet to ask,- for aid apply; Theirs is the sin, not yours, if they the gift deny





