Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1050

பொருட்பால்ஒழிபியல்105. நல்குரவு

துப்புர வில்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று.

tuppura villAr tuvarat tuRavAmaiuppiRkum kATikkum kURRu

DEVADHAI TV

பொருள் / உரை

முருகா எளிய உரை

வாழ்க்கையை நடத்துவதற்கு எந்தப் பொருளும் இல்லாத ஏழைகள், உலகப் பற்றுகளை முழுமையாகத் துறந்து துறவறம் பூணாமல் இல்லறத்தில் வீணாக ஒட்டிக்கொண்டிருப்பது, அடுத்தவர் வீட்டில் இருக்கும் உப்பையும் பழைய கஞ்சித் தண்ணீரையும் இரந்து தின்று அழிக்கும் எமனாகவே முடியும்.

• துப்புரவு இல்லார் = வாழ்வதற்குரிய பொருள் வளம் எதுவும் இல்லாதவர்கள்,• துவரத் துறவாமை = உலகப் பற்றுகளை முழுமையாகத் துறந்துவிடாமல் இல்லறத்தில் ஒட்டிக்கொண்டிருப்பது,• உப்பிற்கும் காடிக்கும் = அடுத்தவர் வீட்டில் உள்ள உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் கூட,• கூற்று = எமனாக முடிந்துவிடும் (இரந்து உண்டு அழிப்பதாகும்).

மு.வரதராசன்

நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

பரிமேலழகர்

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

Meaning in English

Unless the destitute will utterly themselves deny, They cause their neighbour's salt and vinegar to die

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout