Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1049

பொருட்பால்ஒழிபியல்105. நல்குரவு

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதொன்றும் கண்பாடு அரிது.

neruppinuL tunjsalum Akum nirappinuLyAtonRum kaNpA Taritu

K. T. Jayakumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

எரியும் நெருப்பின் நடுவில் கூட ஒருவன் ஏதேனும் வழியில் படுத்துத் தூங்கிவிட முடியும்; ஆனால் கொடிய பசியும் வறுமையும் வாட்டும் போது எவராலும் சிறிது கூடக் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடியாது.

• நெருப்பினுள் = கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவில் கூட,• துஞ்சலும் ஆகும் = ஒருவன் மந்திர மருந்துகளால் படுத்து உறங்கிவிட முடியும்;• நிரப்பினுள் = ஆனால் கொடிய வறுமைச் சூழலில்,• யாதொன்றும் = எவ்வகையிலும் சிறிது கூட,• கண்பாடு அரிது = கண்மூடித் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

மு.வரதராசன்

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

பரிமேலழகர்

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

Meaning in English

Amid the flames sleep may men's eyelids close, In poverty the eye knows no repose

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout