Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1048

பொருட்பால்ஒழிபியல்105. நல்குரவு

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு.

inRum varuvatu kollO nerunalumkonRatu pOlum nirappu

J. Dharshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

'நேற்றைய தினமும் என்னைக் கொல்வது போலக் கொடுமைப்படுத்திய கொடிய பசியும் வறுமையும், இன்றைக்கும் கூட வந்து என்னை வதைக்கப் போகிறதோ?' என்று வறுமையில் வாடும் எளிய மனிதன் நாள்தோறும் அஞ்சிக் கலங்குவான்.

• நெருநலும் = நேற்றைய தினமும்,• கொன்றது போலும் நிரப்பு = என்னைக் கொலை செய்வதைப் போலக் கொடுமைப்படுத்திய வறுமையானது,• இன்றும் = இன்றைக்கும் கூட,• வருவது கொல் = வந்து என்னை வதைக்கப் போகிறதோ? (என்று வறியவன் நாள்தோறும் அஞ்சி வருந்துவான்).

மு.வரதராசன்

நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

பரிமேலழகர்

நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்?(அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)

சாலமன் பாப்பையா

நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

Meaning in English

And will it come today as yesterday, The grief of want that eats my soul away

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout