அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.
aRanjsArA nalkura vInRatA yAnumpiRanpOla nOkkap paTum
Swetha Sathyan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சோம்பேறித்தனத்தாலும் தீய வழிகளாலும் அறநெறிக்கு மாறாகத் தானே வரவழைத்துக் கொண்ட வறுமையில் உழல்பவனை, அவனைப் பெற்றெடுத்த சொந்தத் தாயும் கூட ஒரு அந்நியனைப் போல வெறுத்து ஒதுக்கிப் பார்ப்பாள்.
• அறம் சாரா நல்குரவு = சோம்பேறித்தனத்தாலும் ஒழுக்கக்கேட்டாலும் வந்த அறமற்ற வறுமை உடையவனை,• ஈன்ற தாயானும் = அவனைப் பெற்றெடுத்த சொந்தத் தாயும் கூட,• பிறன் போல = ஒரு அந்நியனைப் போல வெறுப்புடன்,• நோக்கப்படும் = ஒதுக்கிப் பார்க்கத் தொடங்குவாள்.
மு.வரதராசன்
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
பரிமேலழகர்
அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
Meaning in English
From indigence devoid of virtue's grace, The mother e'en that bare, estranged, will turn her face





