இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.
inmaiyin innAta tiyAtenin inmaiyininmaiyE innA tatu
Netraa Vijayakumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு மனிதனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தரக்கூடிய கொடிய நிலை எது என்று கேட்டால், அந்த வறுமைக்கு இணையாக ஒப்பிடுவதற்கு உலகில் வேறு எந்தத் துன்பமும் இல்லாததால், வறுமையைப் போலத் துன்பம் தருவது வறுமை ஒன்றே ஆகும்.
• இன்மையின் = ஒரு மனிதனுக்கு வறுமையைப் போலக் கொடிய துன்பத்தைத் தருவது,• இன்னாதது யாது எனின் = எது என்று ஆராய்ந்து கேட்டால்,• இன்மையின் = வறுமைத் துன்பத்தை ஒப்பிடுவதற்கு,• இன்மையே = அந்த வறுமையைத் தவிர வேறு எதுவும் இல்லாததால் வறுமை ஒன்றே,• இன்னாதது = மிகக் கொடிய துன்பம் தருவதாகும்.
மு.வரதராசன்
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
பரிமேலழகர்
இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று)
சாலமன் பாப்பையா
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.
Meaning in English
You ask what sharper pain than poverty is known; Nothing pains more than poverty, save poverty alone





