Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1038

பொருட்பால்ஒழிபியல்104. உழவு

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.

Erinum nanRAl eruviTutal kaTTapinnIrinum nanRatan kAppu

Abishek H

பொருள் / உரை

முருகா எளிய உரை

பயிருக்கு ஏர் உழுதலை விட உரம் இடுதல் சிறந்தது; களைகளை முழுமையாகப் பறித்தெடுத்த பிறகு, பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதை விடவும் அதனை அழிவுகள் நேராதபடி கண்ணும் கருத்துமாகக் காவல் காப்பதே மிகவும் சிறந்ததாகும்.

• ஏரினும் = நிலத்தை ஏர் உழுவதைக் காட்டிலும்,• எரு இடுதல் நன்று = தகுந்த உரம் இடுதல் மிகவும் நல்லது;• கட்ட பின் = களைகளைப் பறித்து எடுத்த பிறகு,• நீரினும் = பயிருக்கு நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும்,• அதன் காப்பு நன்று = விலங்குகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து அப்பயிரைப் பாதுகாத்துக் காவல் புரிவது மேலானது.

மு.வரதராசன்

ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

பரிமேலழகர்

ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று. (ஏர் - ஆகுபெயர், காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்..)

சாலமன் பாப்பையா

உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

Meaning in English

To cast manure is better than to plough; Weed well; to guard is more than watering now

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout