தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.
toTippuzhuti kaஃsA uNakkin piTitteruvumvENTAtu sAlap paTum
DEVADHAI TV
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• தொடிப் புழுதி = ஒரு பலம் (ஏறத்தாழ 35 கிராம்) எடையுள்ள உழுத மண்ணின் கட்டியானது,• கஃசா உணக்கின் = காற்பலம் (கால் பங்கு) எடையாகும் வரை வெயிலில் காயும்படி நன்கு உழுதால்,• பிடித்து எருவும் வேண்டாது = ஒரு கைப்பிடி அளவு உரம் கூட இட வேண்டிய அவசியமின்றி,• சாலப் படும் = அந்நிலத்தில் பயிர்கள் தழைத்துச் செழிப்பாக விளையும்.எளிய விளக்கம்:உழுத நிலத்தின் மண்ணானது, ஒரு பலம் எடையுள்ள புழுதி காற்பலமாக வற்றிப் பொடியாகும் அளவிற்கு வெயிலில் நன்கு காயும்படி பலமுறை உழப்பட்டால், ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே அந்த நிலத்தில் பயிர்கள் மிகச் செழித்து வளரும்.
மு.வரதராசன்
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.
பரிமேலழகர்
தொடிப்புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின்கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும்.(பிடித்து - பிடியின்கண்ணது. 'பிடித்த' என்பதன் விகாரம் என்பாரும் உளர். 'வேண்டாமல்', 'சான்று' என்பன திரிந்து நின்றன.)
சாலமன் பாப்பையா
உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.
Meaning in English
Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight; Without one handful of manure, Abundant crops you thus secure





