Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1035

பொருட்பால்ஒழிபியல்104. உழவு

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.

iravAr irappArkkon RIvar karavAtukaiseytUN mAlai yavar

Senthil Dass

பொருள் / உரை

முருகா எளிய உரை

தம் சொந்தக் கைகளால் உழுது பயிரிட்டு உணவு தேடி உண்ணும் உழைப்பாளிகள் யாரிடமும் சென்று ஒருபோதும் கையேந்திப் பிச்சை கேட்க மாட்டார்கள்; மாறாக, தம்மிடம் யாசித்து வருவோர்க்கு இல்லை என்று மறைக்காமல் தாராளமாகக் கொடுத்து உதவுவார்கள்.

• கை செய்து ஊண் மாலையவர் = தம் சொந்தக் கைகளால் உழுது உணவு தேடி உண்ணும் இயல்புடைய உழவர்கள்,• இரவார் = யாரிடமும் சென்று ஒருபோதும் கையேந்த மாட்டார்கள்;• இரப்பார்க்கு = தம்மிடம் வந்து கையேந்தும் ஏழைகளுக்கு,• ஒன்று கரவாது ஈவர் = இல்லை என்று மறைக்காமல் தம்மிடம் உள்ள உணவைத் தந்து உதவுவார்கள்.

மு.வரதராசன்

கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

பரிமேலழகர்

கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். ('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.)

சாலமன் பாப்பையா

தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

Meaning in English

They nothing ask from others, but to askers give, Who raise with their own hands the food on which they live

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout