Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1029

பொருட்பால்ஒழிபியல்103. குடிசெயல்வகை

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்குற்ற மறைப்பான் உடம்பு.

iTumpaikkE koLkalam kollO kuTumpattaikkuRRa maRaippAn uTampu

Krithika

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் குடும்பத்திற்கும் சார்ந்த மக்களுக்கும் எந்தக் குறையும் துன்பமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஓயாது பாடுபடும் உழைப்பாளியின் உடம்பானது, துன்பங்களையும் வலிகளையும் தாங்கிக் கொள்வதற்காகவே படைக்கப்பட்ட ஒரு கொள்கலமோ என்று போற்றத்தக்கதாகும்.

• குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு = தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் துன்பங்களும் பழிகளும் வராமல் தடுத்துக் காக்க ஓயாது உழைப்பவனின் உடம்பானது,• இடும்பைக்கே = உழைப்புத் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்கே உரிய,• கொள்கலம் கொல் = ஒரு பாத்திரம் தானோ? (மற்றவர்கள் இன்பம் காணத் தான் துன்பங்களைச் சுமக்கிறான்).

மு.வரதராசன்

தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

பரிமேலழகர்

குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற் காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ? அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ? ('உறைப் பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே ' (புறநா.290) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என்குடி முழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமை நோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?

Meaning in English

Is not his body vase that various sorrows fill, Who would his household screen from every ill

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout