அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.
amarakattu vankaNNar pOlat tamarakattumARRuvAr mERRE poRai
Magizhan Paridhi
பொருள் / உரை
முருகா எளிய உரை
போர்க்களத்தில் பல வீரர்கள் இருந்தாலும் போரின் பெரும் தாக்குதல்களைத் தாங்கிப் போரிடும் சுமை அஞ்சாத தீரமிக்க வீரர்கள் மீதே இருப்பது போல, ஒரு குடும்பத்திலும் சமுதாயத்திலும் எத்தனையோ பேர் இருந்தாலும், அந்தக் குடியைத் தாங்கி உயர்த்தும் முழுப் பொறுப்பும் அதைச் சுமக்க வல்ல ஆற்றலாளர்கள் மீதே வந்து சேரும்.
• அமரகத்து = போர்க்களத்தில் பல வீரர்கள் சென்றாலும்,• வன்கண்ணர் போல = போரின் எதிர்ப்பைத் தாங்கி நிற்கும் பொறுப்பு அஞ்சாத வீரர் மேல் இருப்பதைப் போல,• தமரகத்தும் = ஒரு குடும்பத்திலும் சமுதாயத்திலும் பலர் இருந்தாலும்,• பொறை = அந்தக் குடியைத் தாங்கிக் காக்கும் முழுப் பொறுப்பும்,• ஆற்றுவார் மேற்றே = அதைச் சுமக்கும் ஆற்றலும் நெஞ்சுரமும் கொண்டவரிடமே வந்து சேரும்.
மு.வரதராசன்
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.
பரிமேலழகர்
அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.
Meaning in English
The fearless hero bears the brunt amid the warrior throng; Amid his kindred so the burthen rests upon the strong





