நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.
nallANmai enpa toruvaRkut tAnpiRantaillANmai Akkik koLal
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு மனிதனுக்குச் சிறந்த ஆண்மை மற்றும் தலைமைப் பெருமை என்பது, தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தையும் சமுதாயத்தையும் மேன்மையடையச் செய்து காக்கும் தலைமைப் பொறுப்பைத் தன் உழைப்பினால் வளர்த்துக் கொள்வதேயாகும்.
• ஒருவற்கு நல்லாண்மை என்பது = ஒருவனுக்குச் சிறந்த ஆண்மைப் பெருமை என்று போற்றப்படுவது,• தான் பிறந்த = தான் பிறந்து வளர்ந்த,• இல்லாண்மை = தன் குடும்பத்தை நல்வழியில் வழிநடத்தி ஆளும் தலைமைப் பொறுப்பை,• ஆக்கிக் கொளல் = தன் சொந்த உழைப்பால் தனக்கு உரிமையாக்கிக் கொள்வதே ஆகும்.
மு.வரதராசன்
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
பரிமேலழகர்
ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் - தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல். (போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.)
சாலமன் பாப்பையா
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.
Meaning in English
Of virtuous manliness the world accords the praise To him who gives his powers, the house from which he sprang to raise





