Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1025

பொருட்பால்ஒழிபியல்103. குடிசெயல்வகை

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு.

kuRRam ilanAyk kuTiseytu vAzhvAnaissuRRamAs suRRum ulaku

Vilvapathi

பொருள் / உரை

முருகா எளிய உரை

தீய பழிகளோ தவறுகளோ இல்லாத நேர்மையான வழியில் நின்று, தன் குடும்பத்திற்கும் சார்ந்த சமூகத்திற்கும் நன்மைகளைச் செய்து வாழ்கின்ற பெருந்தகையாளனை, இந்த உலகத்தார் அனைவரும் தமக்குரிய சொந்த உறவினனாக ஏற்று விரும்பிச் சூழ்ந்து கொள்வார்கள்.

• குற்றம் இலனாய் = குற்றமான தீய வழிகளில் செல்லாமல் நேர்மையாளனாய் இருந்து,• குடி செய்து வாழ்வானை = தன் குடும்பத்தையும் மக்களையும் உயர்த்தும் அறப்பணியைச் செய்து வாழ்பவனை,• உலகு = உயர்ந்த உலகத்தார்,• சுற்றமாச் சுற்றும் = தமக்குரிய அன்பான சொந்தமாக விரும்பிச் சூழ்ந்து கொண்டு போற்றுவர்.

மு.வரதராசன்

குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

பரிமேலழகர்

குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார். (குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

Meaning in English

With blameless life who seeks to build his race's fame, The world shall circle him, and kindred claim

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout