சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.
sUzhAmal tAnE muTiveytum tangkuTiyaittAzhA tunjaRRu pavarkku
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தம் குடும்பத்தையும் சமுதாயத்தையும் உயர்த்துகின்ற நற்செயல்களில் காலம் தாழ்த்தாமல் விரைந்து முயன்று உழைப்பவர்களுக்கு, அவர்கள் அதிகமாக வழிவகைகளை ஆராய்ந்து அலட்டிக் கொள்ளாமலேயே அச்செயல்கள் தாமாகவே இனிதே நிறைவேறி வெற்றியைத் தரும்.
• தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு = தம் குடும்பத்தையும் சமுதாயத்தையும் உயர்த்துவதற்கான நற்செயல்களைக் காலம் தாழ்த்தாமல் விரைந்து செய்வோர்க்கு,• சூழாமல் = அவர்கள் திட்டம் தீட்டி வழி தேட வேண்டிய அவசியமின்றி,• தானே முடிவெய்தும் = அந்த நற்காரியங்கள் தாமாகவே வெற்றிகரமாக நிறைவேறும்.
மு.வரதராசன்
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
பரிமேலழகர்
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
Meaning in English
Who labours for his race with unremitting pain, Without a thought spontaneously, his end will gain





