Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1023

பொருட்பால்ஒழிபியல்103. குடிசெயல்வகை

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும்.

kuTiseyval ennum oruvaRkut teyvammaTitaRRut tAnmun tuRum

Nikhil Thampy

பொருள் / உரை

முருகா எளிய உரை

'என் குடும்பத்தையும் என்னைச் சார்ந்த சமுதாயத்தையும் நல்வழியில் உயர்த்துவேன்' என்று திடசங்கல்பம் பூண்டு ஓயாது உழைப்பவனுக்கு, இயற்கையின் பேராற்றலான தெய்வமே கூடத் தன் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு முன்வந்து வழிகாட்டி உதவி செய்யும்.

• குடி செய்வல் என்னும் ஒருவற்கு = 'என் குடும்பத்தையும் சார்ந்த சமுதாயத்தையும் நான் உயர்த்துவேன்' என்று உறுதியோடு உழைக்கும் மனிதனுக்கு,• தெய்வம் = தெய்வமே கூட (இயற்கையின் ஆற்றலே),• மடி தற்று = தன் ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு,• தான் முந்துறும் = அவனுக்கு முன்னே நின்று வழிகாட்டித் துணை செய்யும்.

மு.வரதராசன்

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

பரிமேலழகர்

குடி செய்வல் என்னும் ஒருவற்கு - என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும். (முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.)

சாலமன் பாப்பையா

என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

Meaning in English

'I'll make my race renowned,' if man shall say, With vest succinct the goddess leads the way

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout