Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1018

பொருட்பால்ஒழிபியல்102. நாணுடைமை

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்அறம்நாணத் தக்கது உடைத்து.

piRarnANat takkatu tAnANA nAyinaRanANat takka tuTaittu

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

மற்றவர்கள் கண்டாலே வெட்கப்படக்கூடிய இழிவான பழிச்செயலை ஒருவன் வெட்கமே இல்லாமல் செய்வானானால், அவனைக் கண்டு அறநெறியே வெட்கப்பட்டு அவனை விட்டு நீங்கிவிடும் பெரும் குற்றத்தை அவன் கொண்டவனாகிறான்.

• பிறர் நாணத் தக்கது = காண்போரும் கேட்போரும் வெட்கப்படக்கூடிய ஒரு பழிச் செயலை,• தான் நாணான் ஆயின் = ஒருவன் தனக்குள் சிறிதும் வெட்கமில்லாமல் செய்வானானால்,• அறம் நாணத் தக்கது உடைத்து = அறக்கடவுளே வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப் போய்விடும் குற்றத்தை அவன் அடைவான்.

மு.வரதராசன்

ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

பரிமேலழகர்

பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடைத்து. ('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின், 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)

சாலமன் பாப்பையா

மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

Meaning in English

Though know'st no shame, while all around asha med must be: Virtue will shrink away ashamed of thee

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout