Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1016

பொருட்பால்ஒழிபியல்102. நாணுடைமை

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர்.

nANvEli koLLAtu mannO viyannjAlampENalar mElA yavar

T. H. E Treasury of Human Experience

பொருள் / உரை

முருகா எளிய உரை

பழி பாவங்கள் அணுகாதபடி நாணம் என்னும் நற்குணத்தையே தமக்குரிய பாதுகாப்பு வேலையாகக் கொள்வார்களே தவிர, அந்த நாணத்தைக் கைவிட்டுவிட்டுப் பெறக்கூடிய அகன்ற உலகத்தின் ஆட்சிப் பெருமையையும் உயர்ந்த சான்றோர்கள் விரும்ப மாட்டார்கள்.

• நாண் வேலி கொள்ளாது = பழி பாவங்கள் புகாதபடி நாணம் என்னும் பண்பையே தமக்கு உறுதியான பாதுகாப்பு வேலையாகக் கொள்வதைத் தவிர,• வியன் ஞாலம் = இந்த உலகம் முழுவதையும் ஆளும் செல்வத்தைக் கொடுப்பதாக இருந்தாலும்,• பேணலர் மேலாயவர் = உயர்ந்த சான்றோர்கள் அதை ஒரு பொருட்டாக விரும்பி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மு.வரதராசன்

நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

பரிமேலழகர்

மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார். (பழி பாவங்கள் புகுதாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுதும் நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள், 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

Meaning in English

Unless the hedge of shame inviolate remain, For men of lofty soul the earth's vast realms no charms retain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout