Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1014

பொருட்பால்ஒழிபியல்102. நாணுடைமை

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்பிணிஅன்றோ பீடு நடை.

aNiyanRO nANuTaimai sAnROrk kaஃtinRERpiNiyanRO pITu naTai

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

பழிச் செயல்களுக்கு அஞ்சி நாணும் நற்பண்பே சான்றோர்களுக்கு மிகச் சிறந்த அணிகலனாகும்; அந்த அணிகலன் மட்டும் ஒருவரிடம் இல்லாவிட்டால், அவர் கம்பீரமாக நடைபோட்டு வாழ்வது பார்ப்பவர்களுக்குப் பொறுக்க முடியாத பெரும் நோயாகவே தோன்றும்.

• சான்றோர்க்கு நாண் உடைமை = நற்குணங்கள் நிறைந்த பெரியோர்களுக்கு பழிக்கு நாணும் பண்பே,• அணி அன்றோ = சிறந்த அணிகலனாகும்;• அஃது இன்றேல் = அந்த நாணமாகிய அணிகலன் மட்டும் அவரிடம் இல்லாவிட்டால்,• பீடு நடை = அவர் பெருமிதமாக நடைபோட்டு நடப்பது,• பிணி அன்றோ = பார்ப்பவர்களுக்குப் பொறுக்க முடியாத நோயாகவே தோன்றும்.

மு.வரதராசன்

சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

பரிமேலழகர்

சான்றோர்க்கு நாண் உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம். (அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். ஓகார இடைச்சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

Meaning in English

And is not shame an ornament to men of dignity? Without it step of stately pride is piteous thing to see

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout