ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு.
Unaik kuRitta uyirellAm nANennumnanmai kuRittatu sAlpu
Sreekrishnan Swaminathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
உயிர்கள் அனைத்தும் தசையாலான உடம்பையே தமக்கு ஆதாரமான இருப்பிடமாகக் கொண்டு வாழ்வது போல, சான்றாண்மை என்னும் உயர்ந்த மாண்பானது பழி பாவங்களுக்கு அஞ்சி நாணுகின்ற நற்பண்பையே தனக்கு நிலையான இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிறது.
• உயிர் எல்லாம் = உலகில் உள்ள எல்லா உயிர்களும்,• ஊனைக் குறித்த = ஊனால் ஆகிய உடம்பையே தமக்கு இருப்பிடமாகக் கொண்டு வாழ்கின்றன;• சால்பு = அதுபோல சான்றாண்மை என்னும் பெருங்குணம்,• நாண் என்னும் நன்மை குறித்தது = பழிக்கு நாணுகின்ற நற்குணத்தையே தனக்கு நிலையான இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிறது.
மு.வரதராசன்
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
பரிமேலழகர்
உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா: சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பு என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது. ('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.
சாலமன் பாப்பையா
எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.
Meaning in English
All spirits homes of flesh as habitation claim, And perfect virtue ever dwells with shame





