நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று.
nassup paTAtavan selvam naTuvUruLnassu marampazhut taRRu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறர்க்குக் கொடுத்து உதவாததால் எவராலும் விரும்பப்படாத கஞ்சனின் செல்வம், ஊர் நடுவே நிற்கும் நச்சு மரம் பழங்களைப் பழுத்துக் குலுங்குவதைப் போல, அருகில் இருந்தும் எவராலும் உண்ணப்படாமல் தீமையையே தரும்.
• நச்சப்படாதவன் செல்வம் = பிறர்க்கு ஈயாததால் எவராலும் விரும்பப்படாத கஞ்சனிடம் குவிந்துள்ள செல்வமானது,• நடுவூருள் = ஊரின் நடுவே நின்ற,• நச்சு மரம் = நச்சுத்தன்மை கொண்ட எட்டி மரம்,• பழுத்தற்று = கொத்துக் கொத்தாகப் பழங்களைப் பழுத்துக் குலுங்குவதைப் போன்றதாகும்.
மு.வரதராசன்
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
பரிமேலழகர்
நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும். ('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.)
சாலமன் பாப்பையா
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.
Meaning in English
When he whom no man loves exults in great prosperity, 'Tis as when fruits in midmost of the town some poisonous tree





