Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1004

பொருட்பால்ஒழிபியல்101. நன்றியில்செல்வம்

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.

essamen RenneNNung kollO oruvarAlnassap paTAa tavan

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

எவருக்கும் எதுவும் கொடுத்து உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாத கஞ்சன், தன் காலத்திற்குப் பிறகு இவ்வுலகில் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போகும் அழியாத புகழ் என்று எதனை நினைத்துப் பார்க்க முடியும்?

• ஒருவரால் நச்சப்படாதவன் = யாருக்கும் கொடுத்து உதவாத காரணத்தால் எவராலும் விரும்பப்படாத ஒரு கஞ்சன்,• தான் இறந்த பிறகு = தான் இந்த உலகத்தை விட்டு மறைந்த பிறகு,• எச்சம் என்று = தன் நினைவாக நிலைத்து நிற்கப் போகும் புகழ் என்று,• என் எண்ணுங்கொல் = எதனை நினைத்துப் பார்ப்பானோ? (அவனுக்கு எந்தப் புகழும் எஞ்சாது).

மு.வரதராசன்

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

பரிமேலழகர்

ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

Meaning in English

Whom no one loves, when he shall pass away, What doth he look to leave behind, I pray

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout