Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1001

பொருட்பால்ஒழிபியல்101. நன்றியில்செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல்.

vaittAnvAy sAnRa perumporuL aஃtuNNAnsettAn seyakkiTanta til

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

வீடு நிறையப் பெரும்பொருளைச் சேர்த்து வைத்துவிட்டு, கஞ்சத்தனத்தால் அதனைத் தானும் அனுபவிக்காமல் பிறர்க்கும் கொடுத்து உதவாமல் வாழ்கின்றவன் உயிருடன் இருந்தாலும் செத்த பிணத்தைப் போன்றவனே ஆவான்; அவனது செல்வத்தால் ஒரு நற்பயனும் உண்டாகப் போவதில்லை.

• வாய் சான்ற பெரும்பொருள் வைத்தான் = தன் வீடு நிறையப் பெரும் பொருளைச் சேர்த்து வைத்துவிட்டு,• அஃது உண்ணான் = கஞ்சத்தனத்தால் அதனைத் தானும் நுகராமல் பிறர்க்கும் கொடுக்காதவன்,• செத்தான் = உயிருடன் வாழ்ந்தாலும் இறந்த பிணத்திற்கே சமமாவான்;• செயக்கிடந்தது இல் = அவனால் அந்தச் செல்வத்தால் செய்ய முடிந்த பயன் ஒன்றுமே இல்லை.

மு.வரதராசன்

ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

பரிமேலழகர்

வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனை அகலமெல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும் பொருளை ஈட்டி வைத்து உலோபத்தால் அதனை உண்ணாதவன்; செத்தான் செயக்கிடந்தது இல் - உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான். ('வைத்தான்' என்பது முற்றெச்சம், உண்ணுதல்: அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல்.வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி. அதன்கண் அவனாற் செய்யக்கிடந்ததோர் உரிமையில்லையாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும், இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.

Meaning in English

Who fills his house with ample store, enjoying none, Is dead Nought with the useless heap is done

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout