திருவருட்பா  76. உய்கைத் திருப்பதிகம்

திருவும்  சீரும்சி  றப்பும்தி  றலும்சற் 
குருவும்  கல்வியும்  குற்றமில்  கேள்வியும் 
பொருவில்  அன்னையும்  போக்கறு  தந்தையும் 
தரும  வெள்விடைச்  சாமிநின்  நாமமே. 
1
பொய்ய  னேன்பிழை  யாவும்பொ  றுத்தருள் 
செய்ய  வேண்டும்நின்  செம்பொற்ப  தமலால் 
அய்ய  னேமுக்க  ணாஇவ்அ  டியனேற் 
குய்ய  வேறுபு  கல்இலை  உண்மையே. 
2
கள்ள  நெஞ்சக  னேனும்க  டையனேன் 
வள்ளல்  நின்மலர்  வார்கழற்  பாதமே 
உள்ளு  வேன்மற்றை  ஓர்தெய்வ  நேயமும் 
கொள்ள  லேன்என்கு  றிப்பறிந்  தாள்கவே. 
3
வஞ்ச  மாதர்ம  யக்கம்க  னவினும் 
எஞ்சு  றாதிதற்  கென்செய்கு  வேன்என்றன் 
நெஞ்சம்  அம்மயல்  நீங்கிட  வந்தெனைத் 
தஞ்சம்  என்றுன்  சரண்தந்து  காக்கவே. 
4
பற்று  நெஞ்சகப்  பாதக  னேன்செயும் 
குற்றம்  யாவும்கு  ணம்எனக்  கொண்டருள் 
உற்ற  எள்துணை  யேனும்உ  தவுவாய் 
கற்ற  நற்றவர்  ஏத்தும்முக்  கண்ணனே. 
5
மதியும்  கல்வியும்  வாய்மையும்  வண்மையும் 
பதியும்  ஈந்தெம்ப  சுபதி  மெய்ந்நெறிக் 
கதியின்  வைப்பது  நின்கடன்  வன்கடல் 
வதியும்  நஞ்சம்அ  ணிமணி  கண்டனே. 
6
நீடு  வாழ்க்கை  நெறிவரு  துன்பினால் 
வாடும்  என்னைவ  ருந்தல்என்  றுன்பதம் 
பாடும்  வண்ணம்நற்  பாங்கருள்  வாய்மன்றுள் 
ஆடும்  முக்கண்அ  ருட்பெரு  வெள்ளமே. 
7
சிந்தை  நொந்திச்சி  றியஅ  டியனேன் 
எந்தை  என்றுனை  எண்ணிநிற்  கின்றனன் 
இந்து  சேகர  னேஉன்றன்  இன்னருள் 
தந்து  காப்பதுன்  தன்கடன்  ஆகுமே. 
8
உன்னை  நாடும்என்  உள்ளம்  பிறரிடைப் 
பொன்னை  நாடும்பு  துமைஇ  தென்கொலோ 
மின்னை  நாடும்நல்  வேணிப்பி  ரான்இங்கே 
என்னை  நாடிஎ  னக்கருள்  செய்கவே. 
9
இழைபொ  றுத்தமு  லையவர்க்  கேற்றஎன் 
பிழைபொ  றுப்பதுன்  பேரருட்  கேதகும் 
மழைபொ  றுக்கும்வ  டிவுடை  யோன்புகழ் 
தழைபொ  றுக்கும்ச  டைமுடித்  தந்தையே. 
10
மூட  னேன்பிழை  முற்றும்  பொறுத்துனைப் 
பாட  வேஅருட்  பாங்கெனக்  கீதியேல் 
நாட  வேறும  னையிடை  நண்ணிநான் 
வாட  வேண்டுவ  தென்னைஎம்  வள்ளலே. 
11
மின்னொப்  பாகி  விளங்கும்வி  ரிசடை 
என்னப்  பாஎனக்  கின்னருள்  ஈந்துநின் 
பொன்னொப்  பாந்துணைப்  பூம்பதம்  போற்றியே 
உன்னப்  பாங்கின்உ  யர்நெறி  உய்க்கவே. 
12

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com