தொடர்ந்து படிக்கread this section continuously
ஓதலும் வேண்டா முயிர்க்குயி ருள்ளுற்றாற்காதலும் வேண்டா மெய்காய மிடங்கண்டாற்சாதலும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.
உரைmeaning
தங்களின் உயிருக்கு உயிராக உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை உணர்ந்து அடைந்துவிட்டால், மந்திரங்களை ஓத வேண்டியதில்லை. அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள் தங்களின் உடலையே கோயிலாக ஏற்றுக்கொண்டு வீற்றிருந்தால், வேறு எந்த விதமான விருப்பங்களும் வேண்டியதில்லை. சமாதி நிலையைக் கைவரப் பெற்றுவிட்டால், அழிவு என்பதே இல்லை. ஐந்து புலன்களும் காட்டுகின்ற வழிகளில் போகாமல், அவற்றைத் தம் இஷ்டத்திற்கு மாற்றி வைத்திருப்பவர்களுக்கு, இறைவனைத் தேடி எங்கும் போக வேண்டியதில்லை.
If one realizes and reaches the God who is within as the life of one's own life, there is no need to recite mantras. If the supreme reality of Siva, which is the rare great truth, accepts one's own body as its temple and abides there, no other longing is needed. If the state of samadhi is gained, there is no perishing. And for those who do not go along the paths the five senses point out, but have turned the senses to their own will, there is no need to go anywhere searching for God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தங்களின் உயிருக்கு உயிராக உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை உணர்ந்து அடைந்துவிட்டால், மந்திரங்களை ஓத வேண்டியதில்லை.
If one realizes and reaches the God who is within as the life of one's own life, there is no need to recite mantras.
- வரி 2Line 2
அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள் தங்களின் உடலையே கோயிலாக ஏற்றுக்கொண்டு வீற்றிருந்தால், வேறு எந்த விதமான விருப்பங்களும் வேண்டியதில்லை.
If the supreme reality of Siva, which is the rare great truth, accepts one's own body as its temple and abides there, no other longing is needed.
- வரி 3Line 3
சமாதி நிலையைக் கைவரப் பெற்றுவிட்டால், அழிவு என்பதே இல்லை.
If the state of samadhi is gained, there is no perishing.
- வரி 4Line 4
ஐந்து புலன்களும் காட்டுகின்ற வழிகளில் போகாமல், அவற்றைத் தம் இஷ்டத்திற்கு மாற்றி வைத்திருப்பவர்களுக்கு, இறைவனைத் தேடி எங்கும் போக வேண்டியதில்லை.
And for those who do not go along the paths the five senses point out, but have turned the senses to their own will, there is no need to go anywhere searching for God.
திருமந்திரம் பாடல் #1633
1 / 2





