தொடர்ந்து படிக்கread this section continuously
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசைஅக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்துக்கமும் இல்லை வளமுன்னே தோன்றிடின்மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.
உரைmeaning
வியாழக்கிழமையன்று சூலம் தெற்கு திசையில் அமையும். நாம் செல்லும் திசைக்கு சூலம் இடப் பக்கமாகவோ, பின் பக்கமாகவோ இருந்தால் நன்மை விளையும். நாம் செல்லும் திசைக்கு சூலம் வலப் பக்கமாகவோ, முன் பக்கமாகவோ இருந்தால் தீமை மேலும் மேலும் பெருகும்.
On Thursday, the sulam falls to the south. If, in the direction we travel, the sulam lies to our left or behind us, good comes of it. If the sulam lies to our right or ahead of us, in the direction we travel, misfortune multiplies further and further.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
வியாழக்கிழமையன்று சூலம் தெற்கு திசையில் அமையும்.
On Thursday, the sulam falls to the south.
- வரி 2Line 2
நாம் செல்லும் திசைக்கு சூலம் இடப் பக்கமாக இருந்தாலும்,
If the sulam lies to our left, in the direction we travel,
- வரி 3Line 3
பின் பக்கமாக இருந்தாலும் நன்மை விளையும்.
or behind us, good comes of it.
- வரி 4Line 4
நாம் செல்லும் திசைக்கு சூலம் வலப் பக்கமாகவோ, முன் பக்கமாகவோ இருந்தால் தீமை மேலும் மேலும் பெருகும்.
If the sulam lies to our right or ahead of us, in the direction we travel, misfortune multiplies further and further.
திருமந்திரம் பாடல் #798





