தொடர்ந்து படிக்கread this section continuously
சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்சமாதிதா னில்லை தானவ னாகிற்சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.
உரைmeaning
சமாதி நிலையை அடைபவர்களுக்குப் பலவிதமான யோகங்களும் ஏற்படும். இறைவனுடன் ஒன்றாகக் கலந்து சென்றுவிட்டால், பின் சமாதிகள் வேண்டியதில்லை. தாமே சிவமாகிவிட்டபின், தனியே சமாதி என்பதே இல்லை. சமாதியில் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் எய்தும்.
Those who attain the state of Samadhi come by the many kinds of yoga as well. Once one has gone and merged completely with God, Samadhi itself is no longer needed. Having become Shiva oneself, there is then no separate state called Samadhi. In Samadhi, sixty-four kinds of siddhi are also attained.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சமாதி நிலையை அடைபவர்களுக்குப் பலவிதமான யோகங்களும் ஏற்படும்.
Those who attain the state of Samadhi come by the many kinds of yoga as well.
- வரி 2Line 2
இறைவனுடன் ஒன்றாகக் கலந்து சென்றுவிட்டால், பின் சமாதிகள் வேண்டியதில்லை.
Once one has gone and merged completely with God, Samadhi itself is no longer needed.
- வரி 3Line 3
தாமே சிவமாகிவிட்டபின், தனியே சமாதி என்பதே இல்லை.
Having become Shiva oneself, there is then no separate state called Samadhi.
- வரி 4Line 4
சமாதியில் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் எய்தும்.
In Samadhi, sixty-four kinds of siddhi are also attained.
திருமந்திரம் பாடல் #631





