திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 630

தொடர்ந்து படிக்கread this section continuously

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்ஆதி அடிபணிந் தன்புறு வாரே.

உரை

சமாதி நிலையில், நம்முடைய ஆன்மா ஈடு இணையில்லாத பேரொளியாய் விளங்கும் தேவனாகிய சிவபெருமானோடும், ஆதியான சிவசக்தியோடும் ஒன்றாகக் கலந்துவிடும். அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும், கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும், ஆதிக் கடவுளான சிவபெருமானிடம் அடிபணிந்து அன்புறுவதை நாம் உணரலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    சமாதி நிலையில், நம்முடைய ஆன்மா ஈடு இணையில்லாத பேரொளியாய் விளங்கும் தேவனாகிய சிவபெருமானோடும்,

  • வரி 2

    ஆதியான சிவசக்தியோடும் ஒன்றாகக் கலந்துவிடும்.

  • வரி 3

    அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும், கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும்,

  • வரி 4

    ஆதிக் கடவுளான சிவபெருமானிடம் அடிபணிந்து அன்புறுவதை நாம் உணரலாம்.

திருமந்திரம் பாடல் #630

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout