திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 629

தொடர்ந்து படிக்கread this section continuously

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.

உரை

மனத்தை ஒருமுகப்படுத்தி, இறை நினைப்பிலேயே ஒன்றிச் சமாதி நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு, தாம் யார் என்பதை உணரும் தத்துவம் கைகூடும். தமக்குள் இருக்கும் சிவமும் உலகங்களை இயக்கிக்கொண்டிருக்கும் சக்தியும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும். மாயை நீங்கி, அருள்சக்திக்கு எதிரான காமம், கோபம், அகங்காரம் ஆகியவை அகன்றுவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    மனத்தை ஒருமுகப்படுத்தி, இறை நினைப்பிலேயே ஒன்றிச் சமாதி நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு,

  • வரி 2

    தாம் யார் என்பதை உணரும் தத்துவம் கைகூடும்.

  • வரி 3

    தமக்குள் இருக்கும் சிவமும் உலகங்களை இயக்கிக்கொண்டிருக்கும் சக்தியும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்.

  • வரி 4

    மாயை நீங்கி, அருள்சக்திக்கு எதிரான காமம், கோபம், அகங்காரம் ஆகியவை அகன்றுவிடும்.

திருமந்திரம் பாடல் #629

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout