தொடர்ந்து படிக்கread this section continuously
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்றுசிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.
உரைmeaning
எண்ணங்களைச் சிதறவிடாமல் மனத்தை ஒருமுகப்படுத்தி, அதை மேல்நோக்கிச் செலுத்திச் சென்று, இந்த உலகையெல்லாம் அழகாகச் செதுக்கி உருவாக்கிய பேரொளியாகிய இறைவனின் பொன்போன்ற அழகிய பாதத்தை நாடி, அறிவால் இறைவனை உணர்ந்து, சிவமும் தாமும் இரண்டாக இல்லாமல் ஒன்றாகக் கலந்திருத்தலே குளிர்ந்த சமாதி நிலையாகும்.
Without letting thoughts scatter, gathering the mind into one and directing it upward, seeking the beautiful golden feet of God, the great light who carved and shaped this whole world so finely, and realizing God through understanding, abiding merged as one with Shivam, not two, that is the cool state of Samadhi.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எண்ணங்களைச் சிதறவிடாமல் மனத்தை ஒருமுகப்படுத்தி, அதை மேல்நோக்கிச் செலுத்திச் சென்று,
Without letting thoughts scatter, gathering the mind into one and directing it upward,
- வரி 2Line 2
இந்த உலகையெல்லாம் அழகாகச் செதுக்கி உருவாக்கிய பேரொளியாகிய இறைவனின்,
seeking the beautiful golden feet of God, the great light who carved and shaped this whole world so finely,
- வரி 3Line 3
பொன்போன்ற அழகிய பாதத்தை நாடி, அறிவால் இறைவனை உணர்ந்து,
and realizing God through understanding,
- வரி 4Line 4
சிவமும் தாமும் இரண்டாக இல்லாமல் ஒன்றாகக் கலந்திருத்தலே குளிர்ந்த சமாதி நிலையாகும்.
abiding merged as one with Shivam, not two, that is the cool state of Samadhi.
திருமந்திரம் பாடல் #628





