திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 626

தொடர்ந்து படிக்கread this section continuously

நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியைஅன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.

உரை

நம்பிக்கைக்கு உரியவனும், முதற்பொருளாக விளங்குபவனும், நான்கு வேதங்களாலும் ஓதப்படுபவனும், தங்கத்தின் ஜொலிப்பு போல உள்ளே விளங்கும் சோதியுமான சிவபெருமான் மேல் அன்பு செலுத்தி, ஆசைகளை அடக்கி மனத்தை மேல்நோக்கி ஏறுமாறு செய்து, தலை உச்சியில் தியானித்திருந்தால், அங்கு இருக்கும் சிவபெருமானை வணங்கி அவனுடன் கலந்திருக்கலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    நம்பிக்கைக்கு உரியவனும், முதற்பொருளாக விளங்குபவனும், நான்கு வேதங்களாலும் ஓதப்படுபவனும்,

  • வரி 2

    தங்கத்தின் ஜொலிப்பு போல உள்ளே விளங்கும் சோதியுமான சிவபெருமான் மேல் அன்பு செலுத்தி,

  • வரி 3

    ஆசைகளை அடக்கி மனத்தை மேல்நோக்கி ஏறுமாறு செய்து,

  • வரி 4

    தலை உச்சியில் தியானித்திருந்தால், அங்கு இருக்கும் சிவபெருமானை வணங்கி அவனுடன் கலந்திருக்கலாம்.

திருமந்திரம் பாடல் #626

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout