திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 624

தொடர்ந்து படிக்கread this section continuously

பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்துநாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.

உரை

கட்டுப்பாடின்றி உடம்பின் மேலும் கீழும் செல்லும் பிராணவாயுவை, வீட்டைப் பூட்டி அதைத் தன் கட்டுப்பாட்டில் வைப்பதைப் போல, உடம்பினுள் கட்டுப்படுத்தி வைத்து, ஆசைப்பட்டு வெளியே அலையும் மனதை ஒருமுகப்படுத்தி, வெளியில் பார்க்கும் பார்வையை உள்நோக்கித் திருப்பித் தியானத்தில் அமர்ந்திருந்தால், மாம்பழமும் இனிப்பும் போன்று, இறைவனுடன் ஒன்றிச் சமாதியில் இருக்கலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    கட்டுப்பாடின்றி உடம்பின் மேலும் கீழும் செல்லும் பிராணவாயுவை, வீட்டைப் பூட்டி அதைத் தன் கட்டுப்பாட்டில் வைப்பதைப் போல, உடம்பினுள் கட்டுப்படுத்தி வைத்து,

  • வரி 2

    ஆசைப்பட்டு வெளியே அலையும் மனதை ஒருமுகப்படுத்தி,

  • வரி 3

    வெளியில் பார்க்கும் பார்வையை உள்நோக்கித் திருப்பித் தியானத்தில் அமர்ந்திருந்தால்,

  • வரி 4

    மாம்பழமும் இனிப்பும் போன்று இறைவனுடன் ஒன்றிச் சமாதியில் இருக்கலாம்.

திருமந்திரம் பாடல் #624

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout