தொடர்ந்து படிக்கread this section continuously
மூல நாடி முகட்டல குச்சியுள்நாலு வாசல் நடுவுள் இருப்பீர்காள்மேலை வாசல் வெளியுறக் கண்டபின்காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.
உரைmeaning
மூல நாடியிலிருந்து தலை உச்சிக்குச் செல்லும் பாதையின் நடுவே, கண், காது, மூக்கு, நாக்கு ஆகிய நான்கு உணர்வுகளும் ஒன்று கூடியிருக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். மேலை வாசலாகிய தலை உச்சிக்கு மேலே அண்ட வெளியில் வியாபித்திருக்கும் சிவபெருமானைத் தரிசித்தபின், இறப்பு எனும் எண்ணமே கனவிலும் தோன்றாது.
In the middle of the path that runs from the root channel to the crown of the head, you dwell where the four senses of eye, ear, nose and tongue meet as one. Having beheld, at the upper gate above the crown of the head, Lord Shiva who pervades that space, the very thought of death will not arise, even in a dream.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மூல நாடியிலிருந்து தலை உச்சிக்குச் செல்லும் பாதையின் நடுவே,
In the middle of the path that runs from the root channel to the crown of the head,
- வரி 2Line 2
கண், காது, மூக்கு, நாக்கு ஆகிய நான்கு உணர்வுகளும் ஒன்று கூடியிருக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
you dwell where the four senses of eye, ear, nose and tongue meet as one.
- வரி 3Line 3
மேலை வாசலாகிய தலை உச்சிக்கு மேலே அண்ட வெளியில் வியாபித்திருக்கும் சிவபெருமானைத் தரிசித்தபின்,
Having beheld, at the upper gate above the crown of the head, Lord Shiva who pervades that space,
- வரி 4Line 4
இறப்பு எனும் எண்ணமே கனவிலும் தோன்றாது.
the very thought of death will not arise, even in a dream.
திருமந்திரம் பாடல் #622





