திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 621

தொடர்ந்து படிக்கread this section continuously

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்கண்டுணர் வாகக் கருதியிருப் பார்கள்செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடைகொண்டு குதிரை குசைசெறுத் தாரே.

உரை

குதிரையில் ஏறிப் பல இடங்களைச் சுற்றிப் பார்த்து, புல்வெளியில் ஓடவிட்டு, பின்பு பசுமையான மலையடிவாரத்தில் கட்டி வைப்பதைப் போல, மனமாகிய குதிரையை பிராணவாயுவாகிய கடிவாளத்தின் மூலம் மேல்நோக்கிச் செலுத்தி, தலை உச்சியையும் அதைச் சுற்றியுள்ள இடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, தலை உச்சிக்கு மேலுள்ள வெற்றுவெளியில் செலுத்தி, அங்கே வியாபித்திருக்கும் சிவபெருமானிடம் கட்டிவைத்து, அதன் மூலம் இறைவனைக் கண்டு உணர்ந்து, இறை நினைப்பிலேயே லயித்திருப்பதே சமாதி நிலை ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    குதிரையில் ஏறிப் பல இடங்களைச் சுற்றிப் பார்த்து, புல்வெளியில் ஓடவிட்டு, பின்பு பசுமையான மலையடிவாரத்தில் கட்டி வைப்பதைப் போல,

  • வரி 2

    மனமாகிய குதிரையை பிராணவாயுவாகிய கடிவாளத்தின் மூலம் மேல்நோக்கிச் செலுத்தி,

  • வரி 3

    தலை உச்சியையும் அதைச் சுற்றியுள்ள இடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, தலை உச்சிக்கு மேலுள்ள வெற்றுவெளியில் செலுத்தி,

  • வரி 4

    அங்கே வியாபித்திருக்கும் சிவபெருமானிடம் கட்டிவைத்து, அதன் மூலம் இறைவனைக் கண்டு உணர்ந்து, இறை நினைப்பிலேயே லயித்திருப்பதே சமாதி நிலை ஆகும்.

திருமந்திரம் பாடல் #621

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout