திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 193

முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசிஅடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளிஅடுத்தெரி யாமற் கொடுமின் அரிசிவிடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

உரை

ஒரு பானை, அரிசி, கரண்டி - இந்த மூன்றையும் வைத்துச் சோறு சமைக்க வேண்டுமெனில், அடுப்பில் வைத்து, அடுப்பினடியில் ஐந்து விறகுகளை எரிக்க வேண்டும். விறகுகள் எரிய, பதம்பார்த்துச் சமைக்கப்பட்ட அரிசி சோறாக மாறி, உடலை வளர்க்கும் உணவாகின்றது. இதுபோலவே, அழிகின்ற இந்த உடலுக்குள்ளும் அழிவைத்தராத ஓர் அரிசி இருக்கிறது. அதாவது, தியானத்தின் வழியாக, உடம்பாகிய பானையில், இடகலை பிங்கலை என்கிற கரண்டியை உபயோகித்து, மூச்சுக்காற்றாகிய அரிசியை, பிராணன் (உயிர்க்காற்று), அபானன் (மலக்காற்று), சமானன் (நிரவுக்காற்று), உதானன் (ஒலிக்காற்று), வியானன் (தொழிற்காற்று) ஆகிய ஐந்து விறகுகளால் சமைத்தால், மூச்சுக்காற்று சுழுமுனை வழியே மேலெழும்பி சகஸ்ரரதளத்தை அடைந்து அமுதமாகிய சோறாக மாறும். அந்த அமுத சோறே உயிரை வளர்க்கும் உணவு. அந்த உணவைத் தொடர்ந்து உண்ணும் உயிர், உடலுக்குக் கொடுக்கப்பட்ட காலம் முடிந்தபோதும் அழிந்துவிடாமல், தொடர்ந்து வாழ்ந்து இறைவனைத் தனக்குள் உணர்ந்து பேரின்பத்திலேயே இருக்கும்.

உடலில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலம் முடியும் வரை மட்டுமே உயிர் அதில் வாழும்; அது முடிந்ததும் உடல் அழிந்துவிடும். உடல் அழியாமல் வைத்தே இறைவனை அடைய வேண்டுமெனில், மூச்சுக்காற்றைச் சுழுமுனை நாடி வழியே மேலேற்றி, சகஸ்ரரதளத்தை அடைந்து, அமுதம் பெற்று அதைப் பருகி, இருக்கும் அதே உடலிலேயே உயிரை வைத்து இறைவனுடன் பேரின்பத்தில் இருக்கலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    ஒரு பானை, அரிசி, கரண்டி - இந்த மூன்றையும் வைத்துச் சோறு சமைக்க வேண்டுமெனில்,

  • வரி 2

    அடுப்பில் வைத்து, அடுப்பினடியில் ஐந்து விறகுகளை எரிக்க வேண்டும். விறகுகள் எரிய, பதம்பார்த்துச் சமைக்கப்பட்ட அரிசி சோறாக மாறி, உடலை வளர்க்கும் உணவாகின்றது.

  • வரி 3

    இதுபோலவே, அழிகின்ற இந்த உடலுக்குள்ளும் அழிவைத்தராத ஓர் அரிசி இருக்கிறது. தியானத்தின் வழியாக, உடம்பாகிய பானையில், இடகலை பிங்கலை என்கிற கரண்டியை உபயோகித்து, மூச்சுக்காற்றாகிய அரிசியை, பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகிய ஐந்து விறகுகளால் சமைத்தால்,

  • வரி 4

    மூச்சுக்காற்று சுழுமுனை வழியே மேலெழும்பி சகஸ்ரரதளத்தை அடைந்து அமுதமாகிய சோறாக மாறும். அந்த அமுத சோறே உயிரை வளர்க்கும் உணவு. அந்த உணவைத் தொடர்ந்து உண்ணும் உயிர், உடலுக்குக் கொடுக்கப்பட்ட காலம் முடிந்தபோதும் அழிந்துவிடாமல், தொடர்ந்து வாழ்ந்து இறைவனைத் தனக்குள் உணர்ந்து பேரின்பத்திலேயே இருக்கும்.

திருமந்திரம் பாடல் #193

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout