திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 192

முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகைபீறு மதனைப் பெரிதுணர்ந் தாரில்லைகூறுங் கருமயிர் வெண்மயி ராவதும்ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.

உரை

பட்டு நூலின் சிக்கல் நீக்கி, கரை வைத்து அழகு கூட்டி, கண்ணும் கருத்துமாக நெய்த பட்டாடைகூட நாளாக நாளாக நைந்து ஒருநாள் கிழிந்துபோகும் என்பதை உணராமல், தாம் வாங்கும் பட்டாடை என்றும் இருக்கும் என்று மக்கள் எண்ணுகின்றனர். நாட்கள் கடந்துகொண்டிருப்பதையும், தமக்கு வயது கூடி கிழப்பருவம் வருவதையும், கருப்பாக இருந்த கூந்தல் வெள்ளையாக மாறுவதையும் உணர்ந்துகொள்ளாமல், சூரியன் மறைந்து தோன்றுவதற்கு ஒருநாள் ஆகிறது என்று கூறும் உயிர்கள், அதே குறிப்பால் தமக்கும் வாழ்நாள் குறைந்துகொண்டிருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.

வரி வாரியாக

  • வரி 1

    பட்டு நூலின் சிக்கல் நீக்கி, கரை வைத்து அழகு கூட்டி, கண்ணும் கருத்துமாக நெய்த பட்டாடைகூட,

  • வரி 2

    நாளாக நாளாக நைந்து ஒருநாள் கிழிந்துபோகும் என்பதை உணராமல், தாம் வாங்கும் பட்டாடை என்றும் இருக்கும் என்று மக்கள் எண்ணுகின்றனர்.

  • வரி 3

    நாட்கள் கடந்துகொண்டிருப்பதையும், தமக்கு வயது கூடி கிழப்பருவம் வருவதையும், கருப்பாக இருந்த கூந்தல் வெள்ளையாக மாறுவதையும் உணர்ந்துகொள்வதில்லை.

  • வரி 4

    சூரியன் மறைந்து தோன்றுவதற்கு ஒருநாள் ஆகிறது என்று கூறும் உயிர்கள், அதே குறிப்பால் தமக்கும் வாழ்நாள் குறைந்துகொண்டிருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.

திருமந்திரம் பாடல் #192

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout