திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 190

முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனைவேங்கடத் துள்ளே விளையாடு நந்தியைவேங்கடம் என்றே விரகறி யாதவர்தாங்கவல் லாரினுயிர் தாமறி யாரே.

உரை

உயிர்களின் உடலுக்குத் தீயிட்டால் வெந்துபோகும்; அப்படிப்பட்ட இந்த உடலின் தலைவனாக இருப்பவனும், வேதங்களின் வழியே வினைகளை அழித்துத் தன்னை அடைவிக்க உயிர்களின் உள்ளிருந்தே தன் திருவிளையாடலால் உணர்த்தி குருவாக நிற்பவனும் ஆகிய கூத்தனான இறைவன். உயிர்கள் தம் உடலுக்குள்ளேயே இருந்து விளையாடும் உயிராக இருப்பது இறைவனே என்னும் மாபெரும் ரகசியத்தை அறியாதவர்களாகவும், அண்டசராசரங்களையும் அவற்றுள் உள்ள அனைத்தையும் தாங்கவல்ல இறைவனே தமக்குள்ளும் உயிராக இருந்து தம்மையும் தாங்குகிறான் என்பதை அறியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

உயிர் என்பதே இறைவன்தான். அந்த உயிர் எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் உடலுக்குள் வந்து, அந்தப் பிறவியின் வினைக்கேற்ப உள்ளிருந்தே ஆட்டிவைத்து, அந்த வினையை அழிப்பதும் இறைவனே. இந்த ரகசியத்தை அறியாமலேயே இருக்கின்றனர் உயிர்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களின் உடலுக்குத் தீயிட்டால் வெந்துபோகும்; அப்படிப்பட்ட இந்த உடலின் தலைவனாக இருப்பவனும், வேதங்களின் வழியே வினைகளை அழித்துத் தன்னை அடைவிக்கும் கூத்தனான இறைவனும் அவனே.

  • வரி 2

    உயிர்களின் உள்ளிருந்தே தன் திருவிளையாடலால் உணர்த்தி குருவாக நிற்பவனும் அவனே.

  • வரி 3

    உயிர்கள் தம் உடலுக்குள்ளேயே இருந்து விளையாடும் உயிராக இருப்பது இறைவனே என்னும் மாபெரும் ரகசியத்தை அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.

  • வரி 4

    அண்டசராசரங்களையும் அவற்றுள் உள்ள அனைத்தையும் தாங்கவல்ல இறைவனே தமக்குள்ளும் உயிராக இருந்து தம்மையும் தாங்குகிறான் என்பதையும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #190

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout