திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 188

முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்ததுஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.

உரை

ஐந்து பேருக்கு ஒரு நிலம் கிடைத்தது. அதில் நன்றாக விவசாயம் செய்து விளைச்சல் விளைந்து கிடந்தது. ஐந்து பேரும் அந்த நிலத்தையும் அதன் விளைச்சலையும் கெட்டுப்போகாமல் நன்றாகக் காத்துப் பராமரித்து வந்தனர். ஒரு நாள் அந்த ஐவரின் தலைவன் தன்னிடம் உடனே வந்து சேரும்படி அவர்களுக்கு ஓலை அனுப்பினான். அந்த ஓலை வந்தவுடனே ஐவரும் இதுவரை தாங்கள் காத்துப் பராமரித்து வைத்திருந்த நிலத்தை விட்டுவிட்டு, தங்கள் தலைவனை நாடிச் சென்றுவிட்டனர். இதில் ஐவர் என்பது உடலில் இருக்கும் உயிரின் ஐந்து புலன்கள் - கண் என்னும் பார்த்தல், காது என்னும் கேட்டல், மூக்கு என்னும் நுகர்தல், வாய் என்னும் பேசுதல், தோல் என்னும் தொடுதல். நிலம் என்பது உயிர் உலகில் எடுத்த உடல். ஐவரின் தலைவன் இறைவனே. ஐந்து புலன்களும் உடல் கெட்டுப்போகாமல் நன்றாகக் காத்துப் பராமரித்து வந்தன. உயிரின் உலகப் பிறவி வினைக்காலம் முடிந்ததும், இறைவன் அழைத்தவுடன் ஐந்து புலன்களும் உடலைவிட்டுப் பிரிந்து சென்றுவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஐந்து பேருக்கு ஒரு நிலம் கிடைத்தது. அதில் நன்றாக விவசாயம் செய்து விளைச்சல் விளைந்து கிடந்தது.

  • வரி 2

    ஐந்து பேரும் அந்த நிலத்தையும் அதன் விளைச்சலையும் கெட்டுப்போகாமல் நன்றாகக் காத்துப் பராமரித்து வந்தனர்.

  • வரி 3

    ஒரு நாள் அந்த ஐவரின் தலைவன் தன்னிடம் உடனே வந்து சேரும்படி அவர்களுக்கு ஓலை அனுப்பினான்.

  • வரி 4

    அந்த ஓலை வந்தவுடனே ஐவரும் இதுவரை தாங்கள் காத்துப் பராமரித்து வைத்திருந்த நிலத்தை விட்டுவிட்டு, தங்கள் தலைவனை நாடிச் சென்றுவிட்டனர். இதில் ஐவர் என்பது உடலில் இருக்கும் உயிரின் ஐந்து புலன்கள் - கண் என்னும் பார்த்தல், காது என்னும் கேட்டல், மூக்கு என்னும் நுகர்தல், வாய் என்னும் பேசுதல், தோல் என்னும் தொடுதல்; நிலம் என்பது உடல்; தலைவன் இறைவனே. உயிரின் பிறவி வினைக்காலம் முடிந்ததும், இறைவன் அழைத்தவுடன் ஐந்து புலன்களும் உடலைவிட்டுப் பிரிந்து செல்லும்.

திருமந்திரம் பாடல் #188

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout