திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 164

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

உரை

விளக்கு இருக்கும்போதே அதிலிருந்த ஒளியை எமன் எடுத்துக்கொண்டான் என்று கதறுகிறார்கள். எண்ணெயாகிய வினைகள் தீர்ந்துவிட்டதால்தான் ஜோதியாகிய உயிரும் நின்றுவிட்டது என்பதை அவர்கள் அறியவில்லை. தினமும் விடிகின்ற காலைப் பொழுதுக்குப் பின், இரவு வந்து அது இருளாகிவிடும் என்பதை உணராத இந்த உலகத்தார், இறந்தவனுக்காகத் துக்கத்தில் புலம்புகின்றனர். பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு என்பதை அறியாமல், உலகப் பற்றுகளில் ஆசை வைத்து, நிலையற்ற உடலை நிலையானது என்று எண்ணி வருந்துகின்றனரே.

வரி வாரியாக

  • வரி 1

    விளக்கு இருக்கும்போதே அதிலிருந்த ஒளியை எமன் எடுத்துக்கொண்டான் என்று கதறுகிறார்கள்.

  • வரி 2

    எண்ணெயாகிய வினைகள் தீர்ந்துவிட்டதால்தான் ஜோதியாகிய உயிரும் நின்றுவிட்டது என்பதை அவர்கள் அறியவில்லை.

  • வரி 3

    தினமும் விடிகின்ற காலைப் பொழுதுக்குப் பின் இரவு வந்து அது இருளாகிவிடும் என்பதை உணராத இந்த உலகத்தார், இறந்தவனுக்காகத் துக்கத்தில் புலம்புகின்றனர்.

  • வரி 4

    பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு என்பதை அறியாமல், உலகப் பற்றுகளில் ஆசை வைத்து, நிலையற்ற உடலை நிலையானது என்று எண்ணி வருந்துகின்றனரே.

திருமந்திரம் பாடல் #164

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout