திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 154

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்செப்ப மதிளுடைக் கோயில் சிதைந்தபின்ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

உரை

மனித உடலில் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழ்கின்றன. அந்தத் தொண்ணூற்றாறு தத்துவங்களாலும் கட்டப்பட்ட மதிலாகிய உடல் சூழ்ந்த கோயிலுக்குள், ஆன்மாவாகிய உயிர் வாழ்கின்றது. எப்போது அந்தக் கோயிலாகிய உடல் பழுதடைந்து, உயிர் அதைவிட்டுப் போகிறதோ, அப்போது அதன் மதிலாக இருந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஒன்றாக ஓடிவிடுகின்றன.

வரி வாரியாக

  • வரி 1

    மனித உடலில் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழ்கின்றன.

  • வரி 2

    அந்தத் தொண்ணூற்றாறு தத்துவங்களாலும் கட்டப்பட்ட மதிலாகிய உடல் சூழ்ந்த கோயிலுக்குள், ஆன்மாவாகிய உயிர் வாழ்கின்றது.

  • வரி 3

    எப்போது அந்தக் கோயிலாகிய உடல் பழுதடைந்து உயிர் அதைவிட்டுப் போகிறதோ,

  • வரி 4

    அப்போது அதன் மதிலாக இருந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஒன்றாக ஓடிவிடுகின்றன.

திருமந்திரம் பாடல் #154

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout