தொடர்ந்து படிக்கread this section continuously
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறைநாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்டநாட்டைவிட்டு நம்பி நடக்கின்ற வாறே.
உரைmeaning
தன் நாட்டிற்கு அரசனாகவும், குடிமக்களில் முதல்வனாகவும் இருந்தவன், பலவித பல்லக்குகளில் ஏறித் திரிந்தவன், கடைசியில் சுடுகாட்டிற்குச் செல்லும் பாடையில் உயிர் பிரிந்து கிடக்கிறான். அவனுடைய நாட்டின் குடிமக்கள் அவனுக்குப் பின்னால் வர, அவனுக்கு முன்னால் பறை அடிப்பவர்கள் மத்தளம் கொட்ட, இதுவரை அவன் ஆட்சி செய்த நாட்டைவிட்டு அவன் செல்லும் முறை இதுவே ஆகும்.
He who was king of his own land and first among its people, who rode about in palanquins of every kind, lies at the last with the life gone from him, on the bier that goes to the burning ground. With the people of his own land walking behind him and the drummers beating ahead of him, this is the manner in which he leaves the land he ruled until now.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தன் நாட்டிற்கு அரசனாகவும், குடிமக்களில் முதல்வனாகவும் இருந்தவன்.
He who was king of his own land and first among its people.
- வரி 2Line 2
பலவித பல்லக்குகளில் ஏறித் திரிந்தவன், கடைசியில் சுடுகாட்டிற்குச் செல்லும் பாடையில் உயிர் பிரிந்து கிடக்கிறான்.
He who rode about in palanquins of every kind lies at the last with the life gone from him, on the bier that goes to the burning ground.
- வரி 3Line 3
நாட்டின் குடிமக்கள் அவனுக்குப் பின்னால் வர, முன்னால் பறை அடிப்பவர்கள் மத்தளம் கொட்டுகிறார்கள்.
The people of his land walk behind him, and ahead of him the drummers beat their drums.
- வரி 4Line 4
இதுவரை அவன் ஆட்சி செய்த நாட்டைவிட்டு அவன் செல்லும் முறை இதுவே ஆகும்.
This is the manner in which he leaves the land he ruled until now.
திருமந்திரம் பாடல் #153





