தொடர்ந்து படிக்கread this section continuously
கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சறநெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவேமெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.
உரைmeaning
மை பூசிய கண்களையுடைய மனைவியும், தேடிச் சேர்த்த செல்வமும் அருகில் இருக்க, மருத்துவர் கையில் நாடி பார்த்துவிட்டு, இனி மருத்துவம் பயனளிக்காது என்று கைவிட்டுவிடுகிறார். கொடுத்தது, வாங்கியது, இனிச் செய்யவேண்டியது என அனைத்தையும் மற்றவர்களிடம் சொல்ல எண்ணியும், நினைவுகள் இல்லாமல் தடுமாறி, உடலில் ஒட்டியிருந்த உயிர் மூச்சு ஒடுங்கிவிடும். வாசம் மிகுந்த நெய்யால் செய்த உணவுகளை உண்டு மகிழ்ந்த மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களும் செயலிழந்து, உடலைவிட்டு உயிர் பிரிந்துவிடும்.
With his kohl-eyed wife and the wealth he had gathered right beside him, the physician feels the pulse at his wrist and gives up, saying medicine will help no longer. Though he means to tell the others everything, what he gave, what he took, and what is still to be done, memory fails him, he falters, and the breath of life that clung to the body subsides. The five senses, body, mouth, eye, nose and ear, which had enjoyed food made with fragrant ghee, cease to act, and the life parts from the body.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மருத்துவர் கையில் நாடி பார்த்துவிட்டு, இனி மருத்துவம் பயனளிக்காது என்று கைவிட்டுவிட, நினைவுகள் இல்லாமல் தடுமாறுகிறான்.
The physician feels the pulse at his wrist and gives up, saying medicine will help no longer, and memory fails him and he falters.
- வரி 2Line 2
வாசம் மிகுந்த நெய்யால் செய்த உணவுகளை உண்டு மகிழ்ந்த மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களும் செயலிழந்துவிடும்.
The five senses, body, mouth, eye, nose and ear, which had enjoyed food made with fragrant ghee, cease to act.
- வரி 3Line 3
மை பூசிய கண்களையுடைய மனைவியும், தேடிச் சேர்த்த செல்வமும் அருகிலேயே இருக்கும்.
His kohl-eyed wife and the wealth he had gathered stand right there beside him.
- வரி 4Line 4
கொடுத்தது, வாங்கியது, இனிச் செய்யவேண்டியது என அனைத்தையும் சொல்ல எண்ணியும் முடியாமல், உடலில் ஒட்டியிருந்த உயிர் மூச்சு ஒடுங்கி, உடலைவிட்டு உயிர் பிரிந்துவிடும்.
Meaning to tell them everything, what he gave, what he took and what is still to be done, and unable to, the breath of life that clung to the body subsides, and the life parts from it.
திருமந்திரம் பாடல் #151





