திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 149

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

மன்றத்தே நம்பி தன்மாடம் எடுத்ததுமன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.

உரை

ஊரில் ஒருவன் தன் முயற்சியால் பெரும் பொருள் சேர்த்து, பலரும் வியக்கும் வண்ணம் பல அடுக்கு மாளிகையைக் கட்டினான். பின் ஊர் அறியப் பல்லக்கு ஒன்று செய்து, அதில் ஏறினான். ஊரில் உள்ளோர்க்குப் பல தானங்களை வழங்கினான். அவனுடைய உடலைவிட்டு உயிர் பிரிந்தபின், பலர் நின்று தலைவனே என்று கூப்பிட்டுக் கதறியும், அவன் உயிர் திரும்பாமலே போய்விட்டது.

வரி வாரியாக

  • வரி 1

    ஊரில் ஒருவன் தன் முயற்சியால் பெரும் பொருள் சேர்த்து, பலரும் வியக்கும் வண்ணம் பல அடுக்கு மாளிகையைக் கட்டினான்.

  • வரி 2

    பின் ஊர் அறியப் பல்லக்கு ஒன்று செய்து அதில் ஏறினான்.

  • வரி 3

    ஊரில் உள்ளோர்க்குப் பல தானங்களை வழங்கினான்.

  • வரி 4

    உயிர் பிரிந்தபின், பலர் நின்று தலைவனே என்று கூப்பிட்டுக் கதறியும், அவன் உயிர் திரும்பாமலே போய்விட்டது.

திருமந்திரம் பாடல் #149

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout