திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 148

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

உரை

புதிதாகத் திருமணம் செய்த மாப்பிள்ளைக்கு அறுசுவையோடு உணவு சமைத்து வைத்தார்கள். மாப்பிள்ளையும் அந்த உணவை நன்றாகச் சுவைத்து உண்டான். கொடிபோன்ற இடை கொண்ட இளம் மனைவியுடன் சுகமாகக் குலாவினான். இடது பக்கம் சிறிது வலிக்கிறது என்றான். மனைவி அவனைத் தன் மடியில் கிடத்திப் படுக்க வைத்து, என்ன ஆயிற்று என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே, இதய வலியால் உயிர் பிரிந்து அவன் இறந்துபோனான். உயிர் எவ்வளவு நிலைப்புத் தன்மை இல்லாதது என்பதை விளக்கும் ஒரு நிகழ்வு இது. இதை உணர்ந்து, என்றும் நிலைத்திருக்கும் இறைவனையே போற்றுவோம்.

வரி வாரியாக

  • வரி 1

    புதிதாகத் திருமணம் செய்த மாப்பிள்ளைக்கு அறுசுவையோடு உணவு சமைத்து வைத்தார்கள்; அவனும் அதை நன்றாகச் சுவைத்து உண்டான்.

  • வரி 2

    கொடிபோன்ற இடை கொண்ட இளம் மனைவியுடன் சுகமாகக் குலாவினான்.

  • வரி 3

    இடது பக்கம் சிறிது வலிக்கிறது என்றான்.

  • வரி 4

    மனைவி அவனைத் தன் மடியில் கிடத்தி, என்ன ஆயிற்று என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே, இதய வலியால் உயிர் பிரிந்து அவன் இறந்துபோனான்.

திருமந்திரம் பாடல் #148

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout