திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 145

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டுநீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

உரை

உயிர் உடலில் இருந்தவரை அவனுடன் வாழ்ந்த மனைவி, குழந்தைகள், உறவினர், சுற்றத்தார், ஊரார் என அனைவரும், அவன் இறந்தபின் ஒன்றாகக் கூடி, சத்தமிட்டு அழுது புலம்புகிறார்கள். பின்பு அதுவரை அவனுக்கு இருந்த பெயரைச் சொல்லிக் கூப்பிடாமல், பிணம் என்று ஒரு பெயரை வைத்துவிடுகிறார்கள். அனைவரும் சேர்ந்து அவனுடைய உடலைத் தூக்கிச் சென்று, ஊருக்கு வெளியே சூரைப் புதர்கள் நிறைந்த சுடுகாட்டில் வைத்து எரித்துவிடுகிறார்கள். அந்த உடலைத் தொட்டதைத் தீட்டு என்று சொல்லி, அதைப் போக்க ஆற்றில் மூழ்கி எழுகிறார்கள். பின்பு மெல்ல மெல்ல அவனைப் பற்றிய நினைவுகளையும் மறந்துபோகிறார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    மனைவி, குழந்தைகள், உறவினர், சுற்றத்தார், ஊரார் என அனைவரும் ஒன்றாகக் கூடிச் சத்தமிட்டு அழுது புலம்புகிறார்கள்.

  • வரி 2

    அதுவரை இருந்த பெயரைச் சொல்லிக் கூப்பிடாமல், பிணம் என்று ஒரு பெயரை வைத்துவிடுகிறார்கள்.

  • வரி 3

    அனைவரும் சேர்ந்து உடலைத் தூக்கிச் சென்று, ஊருக்கு வெளியே சூரைப் புதர்கள் நிறைந்த சுடுகாட்டில் வைத்து எரித்துவிடுகிறார்கள்.

  • வரி 4

    உடலைத் தொட்ட தீட்டைப் போக்க ஆற்றில் மூழ்கி எழுந்து, பின்பு மெல்ல மெல்ல அவனைப் பற்றிய நினைவுகளையும் மறந்துபோகிறார்கள்.

திருமந்திரம் பாடல் #145

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout