Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 926

பொருட்பால்அங்கவியல்93. கள்ளுண்ணாமை

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

tunjsinAr settArin vERallar enjnjAnRumnanjsuNpAr kaLLuN pavar

Mohan Raju

பொருள் / உரை

முருகா எளிய உரை

உறங்குபவர்கள் தற்காலிகமாகச் செத்த பிணத்தைப் போன்றவர்களே ஆவர்; அதுபோலவே, கள்ளருந்தித் தன் அறிவையும் உடலையும் அழிப்பவர்கள் நாள்தோறும் நஞ்சை உண்டு தங்களைத் தாமே மாய்த்துக் கொள்பவர்களே ஆவர்.

• துஞ்சினார் = உறங்குபவர்,• செத்தாரின் வேறல்லர் = இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர்;• எஞ்ஞான்றும் கள்ளுண்பவர் = எப்போதும் மது அருந்துபவர்கள்,• நஞ்சுண்பார் = விஷம் அருந்துபவரே ஆவர்.

மு.வரதராசன்

உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

பரிமேலழகர்

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் - உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் - அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்படார், அவர்தாமே யாவர். (உறங்கினார்க்கும் கள் உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலான் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்ந்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

Meaning in English

Sleepers are as the dead, no otherwise they seem; Who drink intoxicating draughts, they poison quaff, we deem

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout