Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 825

பொருட்பால்அங்கவியல்83. கூடாநட்பு

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற்று அன்று.

manattin amaiyA tavarai enaittonRumsollinAl tERaRpAR RanRu

Sowmmya Vijay

பொருள் / உரை

முருகா எளிய உரை

உள்ளத்தால் நம்மோடு உண்மையாக இணையாத போலி மனிதர்களை, அவர்கள் பேசும் இனிமையான கவர்ச்சிப் பேச்சுகளை மட்டுமே நம்பி எந்தவொரு செயலிலும் ஒப்படைத்துத் தேர்ந்துவிடக் கூடாது.

• மனத்தின் அமையாதவரை = உள்ளத்தால் பொருந்தாத மனிதர்களை,• சொல்லினால் எனைத்தொன்றும் தேறற்பாற்று அன்று = இனிமையான சொல்லை மட்டும் நம்பி எக்காரியத்திலும் தேறக்கூடாது.

மு.வரதராசன்

மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.

பரிமேலழகர்

மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு மேவாதாரை; எனைத்து ஒன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று - யாதாரு கருமத்தினும் சொல்லால் தெளிதல் முறைமைத்தன்று, நீதிநூல். ('நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தெளிதல் நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.)

சாலமன் பாப்பையா

மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.

Meaning in English

When minds are not in unison, 'its never; just, In any words men speak to put your trust

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout